நெல்லையப்பர் கோயில் ஆரூத்ரா தரிசன திருவிழா - நடராஜருக்கு சிறப்பு தீபாராதணை

நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் ஆரூத்ரா தரிசன திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
நெல்லையப்பர் கோயில் ஆரூத்ரா தரிசன திருவிழா - நடராஜருக்கு சிறப்பு தீபாராதணை
x
நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் ஆரூத்ரா தரிசன திருவிழா விமர்சையாக நடைபெற்றது. கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவின் முக்கிய நாளான இன்று அதிகாலை, நடராஜரின் நடன காட்சியான ஆரூத்ரா தரிசனம் நடைபெற்றது. திருவெம்பாவை பாடல்களுடன் நடராஜருக்கு சிறப்பு தீபாரதணை நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆருத்ரா தரிசனம் கோலாகலம் - ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் அருள்பாலிக்கும் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு இன்று அதிகாலை 2 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, காலை 5 மணியளவில் ஆருத்ரா தரிசனம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதனைக் காண ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். முன்னதாக, கோ பூஜை மற்றும் சுமங்கலி பூஜை நடத்தப்பட்டு, மாணிக்கவாசகருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

ஆருத்ரா தரிசனம்-ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

பூலோக கைலாயம்  என்றழைக்கப்படும் திருவொற்றியூர்   வடிவுடையம்மன் சமேத தியாகராஜ சுவாமி  திருக்கோவிலில்  ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 18 சங்க நாத வாத்தியங்கள் முழங்க 4 மாட வீதிகளில் நடராஜர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆருத்ரா தரிசனம்-ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ஆருத்ரா தரிசனத்தையொட்டி, சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோயிலில் அருள்பாலிக்கும் உற்சவர் சிவகாமி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. 64 வகையான பொருட்களை கொண்டு செய்யப்பட்ட அபிஷேகத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு நடராஜர் பல்லக்கில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கழுகு பார்வையில் சிதம்பரம் நடராஜர் கோவில்


சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா நடைபெற உள்ள நிலையில் ஆலயத்தின் அழகை கழுகுப் பார்வையில் பார்க்கலாம்.

வடாரண்யேஸ்வர சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம்

திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான திருவாலங்காடு, வடாரண்யேஸ்வர சுவாமி கோவிலில் இன்று ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. சிவபெருமான் நடனமாடிய, 5 சபைகளில் முதல்சபையாக கூறப்படும்  இங்கு,  விழா விமரிசையாக நடைபெறும். ஆருத்ரா தரிசனத்தைக் காண பல ஆயிரம் பேர் வருவார்கள் என்பதால் கோவில் வளாகத்தில் பிரமாண்ட பந்தல் போடப்பட்டுள்ளது.

பெரியநாயகியம்மன் திருவாதிரை பொன்னூஞ்சல் விழா

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பெரியநாயகியம்மன் கோயிலில் திருவாதிரை திருநாளை முன்னிட்டு பொன்னூஞ்சல் விழா நடைபெற்றது.  பெரியநாயகியம்மன் சன்னதி முன்பு, மலர்களால் செய்யப்பட்ட ஊஞ்சலில் அம்மன்  எழுந்தருளினார். இதனை தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

இஸ்கான் சேவா சங்கம் சார்பில் கிருஷ்ணர் ரத ஊர்வலம்

இஸ்கான் சேவா சங்கம் சார்பில் கிருஷ்ணகிரியில் கிருஷ்ணர் ராதா ஊர்வல நிகழ்ச்சி நடைபெற்றது. பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட கிருஷ்ணர் ரத வாகனம், கிருஷ்ணகிரி ரவுண்டானா காந்தி சிலை வழியாக புதிய பேருந்து நிலையம் வந்தடைந்தது. 

காட்டுபாவா பள்ளிவாசல் சந்தனக்கூடு விழா

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காட்டுபாவா பள்ளிவாசலில்  சந்தனக்கூடு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சந்தனக்கூடு திருவிழாவின் முக்கிய நாளான இன்று, சந்தனம் பூசும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது இன்று அதிகாலை அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு, தேரில்  ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. விழாவில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தவரும் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்