நாசா காலாண்டரில் திண்டுக்கல் மாணவனின் ஓவியம்

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள 2019-ம் ஆண்டுக்கான காலண்டரில் பழனியை சேர்ந்த மாணவன் வரைந்த ஓவியம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.
நாசா காலாண்டரில் திண்டுக்கல் மாணவனின் ஓவியம்
x
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள 2019-ம் ஆண்டுக்கான காலண்டரில் பழனியை சேர்ந்த மாணவன் வரைந்த ஓவியம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் போட்டிகள் நடத்தி, அதில் தேர்வாகும் படங்களை நாசா, தனது காலாண்டரில் அச்சிட்டு வருகிறது. இந்த நிலையில், 2019-ம் ஆண்டுக்கான போட்டியில் கலந்து கொண்ட 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளில், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த அரசுப் பள்ளி தலைமையாசிரிர் நடராஜன் - சந்திராமணி தம்பதியரின் மகன் தேன்முகிலன் வரைந்த படம் தேர்வு பெற்று, நாசாவின் காலண்டரில் இடம் பிடித்துள்ளது. இந்த  போட்டியில் இந்தியாவில் இருந்து இரண்டு படங்கள் தேர்வாகியுள்ளன என்பது குறிப்பித்தக்கது. உணவு என்ற தலைப்பில் வரைந்து அனுப்பிய ஓவியம் வெற்றி பெற்றுள்ளதாக மாணவன் தேன்முகிலன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்