இளைஞர்கள் விரும்பும் உடலையும் மனதையும் லேசாக்கும் சிகிச்சை

உடலையும் மனதையும் லேசாக்கும் வகையில் மிதக்கும் புதிய சிகிச்சை முறை சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
x
வாரத்தில் ஏழு நாட்கள் கடும் பணிச் சுமையில் சிக்கித் தவிப்போர் வார இறுதியில் மன அமைதியை தேடி ஓடுவார்கள். காரில் நெடுந்தூர பயணம், மனதுக்கு பிடித்த சினிமா, பீச், குழந்தைகளுடன் ஷாப்பிங் என அவரவர் ரசனைக்கு ஏற்றார் போல தங்கள் ஓய்வு நேரத்தை தேர்ந்தெடுப்பார்கள். அதிலும் பெண்களை எடுத்துக் கொண்டால் பியூட்டி பார்லருக்கு சென்று ஸ்பா சிகிச்சை செய்து கொள்வது அவர்களை அடுத்த வாரம் முழுக்கவே உற்சாகமாக வைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையும் உண்டு.


ஒரு சிலரோ ஆயுர்வேத சிகிச்சையில் உடல் முழுக்க எண்ணெய் பூசி, மசாஜ் செய்து கொண்டால் ரிலாக்ஸாக உணர்வார்கள். இதற்காகவே வருடத்தில் சில நாட்களை ஒதுக்கி குற்றாலத்திற்கு செல்வோரையும் பார்க்க முடியும். அதுபோல் போக முடியாதவர்கள் தங்கள் அருகாமையில் இருக்கும் ஆயுர்வேத மையத்தையாவது நாடிச் செல்வர்.

இந்த வரிசையில் மன அழுத்தத்திற்கும், உடல் வலிகளுக்கும் தீர்வு சொல்லும் வகையில் வந்திருக்கிறது ஃப்ளோட்டிங் தெரபி எனப்படும் மிதவை சிகிச்சை முறை... பார்ப்பதற்கு ஒரு பெரிய டைனோசர் முட்டை போன்றே தோற்றம் தரும் ஒரு குடுவைக்குள் இறங்கி சில மணி நேரங்கள் வரை வைத்திருக்கிறார்கள். உள்ளே கால் வைத்ததுமே நாம் மிதக்க தொடங்கி விடுவோம். இந்த குடுவைக்குள் உப்பும், தண்ணீரும் கலந்து அதில் நம்மை மிதக்க வைப்பதன் மூலம் புதிய உலகத்திற்கே அழைத்துச் செல்கின்றனர்.

இந்த குடுவையில் இருக்கும் போது உடலும் மனதும் ரிலாக்ஸ் ஆவதோடு, நம் புலன்களை எல்லாம் உள்ளே இருக்கும் நேரம் வரை செயலிழக்க வைத்து புத்துணர்ச்சி அளிக்குமாம்... மிதவை குடுவையில் இருந்து வெளியே வரும் போது நம் உடலில் உள்ள தேவையற்ற செல்கள் எல்லாம் உதிர்ந்து புதிய பொலிவோடு திரும்ப முடியும்.

Next Story

மேலும் செய்திகள்