அண்ணா பல்கலை. கேள்வித்தாள் வெளியான விவகாரம் : தற்காலிக பெண் ஊழியருக்கு தொடர்பு...
அண்ணா பல்கலைக்கழக கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் திடீர் திருப்பமாக பல்கலைக்கழக தற்காலிக பெண் ஊழியருக்கு தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த 3-ஆம் தேதி பொறியியல் முதலாம் ஆண்டு கணித தேர்வு கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானது. இதனையடுத்து அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிபிசிஐடி, செய்யப்பட்ட சுரேஷ்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்கலைக்கழக தற்காலிக ஊழியரான காஞ்சனா என்பவர் கேள்வித்தாளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவான காஞ்சனாவை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே முக்கிய பிரிவுகளில் பணியாற்றக்கூடிய தற்காலிக ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேள்வித்தாள் வெளியான விவகாரம் - முன்னாள் துணை வேந்தர் கலாநிதி கருத்து
Next Story