பட்டாசு தொழில் பாழாக அனுமதிக்க மாட்டோம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் அனுப்பங்குளத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் முகாமில், கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடனடியாக அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்
x
விருதுநகர் மாவட்டம் அனுப்பங்குளத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் முகாமில், கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடனடியாக அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார். இந்த நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். மேலும் மீனம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளையும் அமைச்சர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து பேசிய ராஜேந்திர பாலாஜி, பட்டாசு தொழிலை பொறுத்தவரை உச்சநீதிமன்ற தீர்ப்பால், உற்பத்தியை தொடங்குவதில் காலதாமதம் ஏற்படுமே தவிர, ஒருபோதும், பட்டாசு தொழில் பாழாக அனுமதிக்க மாட்டோம் என்று உறுதிபட தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்