எய்ம்ஸ் - வசதிகள் என்ன?

தமிழகம் மற்றும், தெலுங்கானாவில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த கூடுதல் தகவல்களை தற்போது பார்ப்போம்.
எய்ம்ஸ் - வசதிகள் என்ன?
x
மதுரை மாவட்டம் தோப்பூரில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் மதிப்பு ஆயிரத்து 264 கோடி ரூபாயாகும். இதே போல் தெலுங்கானாவின் பிபிநகரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துமனை ஆயிரத்து 28 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. இரு மருத்துவமனைகளிலும் தலா 15 முதல் 20 சூப்பர் சிகிச்சை பிரிவுத்துறை ஏற்படுத்தப்படும். தலா 750 படுக்கை வசதிகள் செய்து தரப்படும் என்றும், நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 500 வெளிநோயாளிகளும், ஒரு மாதத்திற்கு ஆயிரம் உள்நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில், இரு எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும் வசதிகள் உண்டாக்கப்படும் என, மத்திய அமைச்சரவை முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்