ஆங்கில வழி வகுப்புகளில் மாணவர்கள் குறைவாக இருந்தால் வேறு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் - பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்

ஆங்கில வழி வகுப்புகளில் 15 மாணவர்களுக்கு குறைவாக இருந்தால் வேறு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
ஆங்கில வழி வகுப்புகளில் மாணவர்கள் குறைவாக இருந்தால் வேறு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் - பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்
x
ஆங்கில வழி வகுப்புகளில் 15 மாணவர்களுக்கு குறைவாக இருந்தால் வேறு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.மாவட்ட அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

* அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி வகுப்பில் 15-க்கும் குறைவான மாணவர்களே இருந்தால், அவர்களை அருகில் உள்ள வேறு அரசு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அதில், மாணவர்கள் ஆசிரியர் விகிதாச்சாரம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும், ஆங்கில வழி வகுப்புகளில் மாணவர்கள் எவ்வளவு பேர் இருக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

* 1 முதல் 5-ம் வகுப்பு வரை, 60 மாணவர்களுக்கு 2 ஆசிரியர், 30 மாணவர்களுக்கு 1 ஆசிரியர், 6 முதல் 8-ம் வகுப்பு வரை 50 மாணவர்களுக்கு, 2 ஆசிரியர், 6 முதல் 10-ம் வகுப்பு வரை பாடத்திற்கு 1 ஆசிரியர் வீதம் 5 ஆசிரியர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

* ஒவ்வொரு ஆசிரியரும், வாரத்திற்கு 28 வகுப்புகள் எடுக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்  அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்