மயிலாப்பூர் கோயில் சிலைகள் மாற்றப்பட்ட விவகாரம் : அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது
பதிவு : டிசம்பர் 17, 2018, 02:29 AM
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிலைகள் மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது செய்யபட்டார்.
* கடந்த 2004 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சேதமடைந்த நிலையில் இருந்த மயிலுடன் கூடிய புன்னை வனநாதர், ராகு, கேது சிலைகளை மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்கு பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் 3 சிலைகளும் மாற்றப்பட்டு புதிய சிலைகள் வைக்கப்பட்டன. இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், பழைய சிலைகள் காணாமல் போனதாகவும் புகார்கள் எழுந்தன. 

* இது தொடர்பாக ரமேஷ் என்பவர்  தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவிட்டது. பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கடந்த 6 மாதங்களாக விசாரணை நடத்தி  சிலைகள் மாற்றப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதை கண்டு பிடித்தனர்.  இது தொடர்பாக  அப்போதைய கோயில் துணை ஆணையரான திருமகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.   

* கடந்த 28 ந்தேதி முன்ஜாமின் கோரி திருமகள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானர். இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளை போலீசார் இன்று கைது செய்தனர்.  கும்பகோணத்திற்கு அழைத்து சென்று  நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர்.. நீதிபதியின் உத்தரவின் பேரில்,  இன்று நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்த உள்ளனர். 

* காஞ்சிபுரம் கோயில் சிலை முறைகேடு விவகாரத் தொடர்பாக 
அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கடந்த சிலமாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிய பரிந்துரையை திருப்பி அனுப்பியது மத்திய அரசு

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிய தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.

147 views

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை - தமிழக அரசு

சிலை கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தப்பிக்க வைக்கும் நோக்கில் வழக்கை சிபிஐக்கு மாற்றவில்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தகவல்

96 views

சி.பி.ஐ. வசம் சிலை கடத்தல் வழக்குகள்...?

சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

283 views

பிற செய்திகள்

படைகலன் தொழிற்சாலை தினவிழா - ஆயுதம் மற்றும் புகைப்பட கண்காட்சி

நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை தினம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது.

1 views

"2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

23 views

பேஸ்புக் மூலம் 8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் கண்டுபிடிப்பு

கடலூர் மாவட்டம் கோதண்டவிளாகம் கிராமத்தை சேர்ந்த விவேக் என்பவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனார்.

19 views

காங்கிரசில் இணைந்த பாஜக துணைத்தலைவர்

திரிபுரா மாநில பாஜக துணைத்தலைவர் சுபால் பெளமிக்,பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

21 views

ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கு : வழக்கை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி

ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் வழக்கை வாபஸ் பெற புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

22 views

ஜெயேந்திரர் முதலாம் ஆண்டு ஆராதனை மஹோற்சவம்

ஜெயேந்திரர் முதலாம் ஆண்டு ஆராதனை மஹோற்சவம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.