ஸ்டெர்லைட் கொள்கை முடிவு: தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்

ஸ்டெர்லைட் விவகாரத்தில் எதிர்கட்சிகள் கோரிக்கைப்படி தாமிர உற்பத்திக்கு தடை என்ற கொள்கை முடிவு எடுத்தால் தமிழகத்தில் தொழில் தொடங்க தொழில் நிறுவனங்கள் முன்வராது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
x
ஸ்டெர்லைட் விவகாரத்தில் எதிர்கட்சிகள் கோரிக்கைப்படி தாமிர உற்பத்திக்கு தடை என்ற கொள்கை முடிவு எடுத்தால் தமிழகத்தில் தொழில் தொடங்க தொழில் நிறுவனங்கள் முன்வராது  என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற திருமுறை செப்பேட்டு திருப்பணி தொடக்க விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து முழுமையாக செயல்படும் என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்