ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கும் விவகாரம்: "குறிப்போ, கடிதமோ அதிகாரப்பூர்வமாக கிடைக்கவில்லை"

ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்வது தொடர்பாக, அமைச்சரவைக்கு முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன ராவ் எவ்வித குறிப்போ, கடிதமோ அதிகார பூர்வமாக அனுப்பவில்லை என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கும் விவகாரம்: குறிப்போ, கடிதமோ அதிகாரப்பூர்வமாக கிடைக்கவில்லை
x
இதுதொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு அவர் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் விசாரணை ஆணையம் தலைமைச்செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பி இருந்தது. அதில் பல கேள்விகளுக்கு பதில் கோரியிருந்தது. இதற்கு அவர் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், தினந்தோறும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி தலைமையில் மருத்துவர்கள் தரப்பில் மூத்த அமைச்சர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதால், தனிப்பட்டு எவ்வித அறிக்கையும் அரசுக்கு, மருத்துவமனை அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னாள் தலைமை செயலாளரின் வாக்குமூலமும், தலைமை செயலாளரின் பதிலும் முரண்பாடாக உள்ளதாக ஆணையம் கருதுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மீண்டும் ராம்மோகனராவ் மறுவிசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்