1500 பேர் மட்டுமே மலையேற அனுமதி : சதுரகிரி மலையில் மார்கழி பூஜைக்கு அனுமதி
பதிவு : டிசம்பர் 15, 2018, 03:21 AM
1500 பேர் மட்டுமே மலையேற அனுமதி : சதுரகிரி மலையில் மார்கழி பூஜைக்கு அனுமதி
கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்த நிலையில், சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல தனிநபருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது. பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முரளிகணேஷ் என்பவர், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஆண்டுதோறும்  நடைபெறும் மார்கழி 1-ஆம் தேதி பூஜைக்கு அனுமதி கோரியதற்கு  கோயில் நிர்வாகம் பதிலளிக்கவில்லை என்று கூறியிருந்தார் 
இதனை  விசாரித்த நீதிபதிகள், சசிதரன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, ஆயிரத்து 500 பேர் மட்டுமே பூஜையில் கலந்துகொள்ள அனுமதித்தனர் ,  அதே  நேரத்தில்  மாலை 4 மணிக்கு மேல் மலை ஏறக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், பின்னர், வழக்கை முடித்து வைத்தனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.