நலவாழ்வு முகாமில் பங்கேற்றுள்ள யானைகள் : நடனம், இசைக்கருவிகள் வாசிப்பு என உற்சாகம்

நலவாழ்வு முகாமில் பங்கேற்றுள்ள யானைகள் : நடனம், இசைக்கருவிகள் வாசிப்பு என உற்சாகம்
நலவாழ்வு முகாமில் பங்கேற்றுள்ள யானைகள் : நடனம், இசைக்கருவிகள் வாசிப்பு என உற்சாகம்
x
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் தொடங்கி உள்ளது. இதில், திருக்கோயில் மற்றும் மடங்களை சேர்ந்த 27 யானைகள் பங்கேற்றுள்ளன. யானைகளின் எடைக்கு ஏற்பட நடைபயிற்சி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஷவர் மற்றும் குளியல் மேடையில், யானைகள் உற்சாக குளியல் போடுகின்றன. கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி அரிசி சாதம் கொள்ளு, பசுந்தீவனங்கள், பழங்கள் அஷ்ட சூரணம்  பயோ பூஸ்ட் போன்றவை யானைகளுக்கு வழங்கப்படுகிறது. காட்டு யானைகள், முகாம் பகுதிக்குள் நுழையாமல் தடுப்பதற்காக,  சூரிய மின்வேலி, தொங்கு மின் வேலிகள் போடப்பட்டு சீரியல் லைட்டுகளும் எரிய வைக்கப்பட்டுள்ளன. 

மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில்  நலவாழ்வு முகாமிற்கு வந்துள்ள யானைகள் இசைக்கருவிகள் வாசித்தும், நடனமாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறது... அந்த காட்சிகளை இப்போது பார்க்கலாம்... 

Next Story

மேலும் செய்திகள்