"வரும் 31ஆம் தேதிக்குள் கடைகளை காலி செய்ய உறுதியளிக்க வேண்டும்" : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது
பதிவு : டிசம்பர் 14, 2018, 06:15 AM
"வரும் 31ஆம் தேதிக்குள் கடைகளை காலி செய்ய உறுதியளிக்க வேண்டும்" : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது
மதுரை மாநகராட்சி பகுதியில் 155 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக பெரியார் பேருந்து நிலையத்தை நவீனப்படுத்தும் பணிக்காக பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் இடிக்கப்பட உள்ளன. இதற்காக பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை 15 நாட்களில் காலி செய்யுமாறு மதுரை மாநகராட்சி சார்பில் அக்டோபர்  22-ல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்த நோட்டீஸூக்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பெரியார் பேருந்து நிலையத்திலிருக்கும் கடை உரிமையாளர்கள் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் கடைகளை காலி செய்யும் உறுதிப் பத்திரத்தை வழங்கவும்,  நிலுவை வாடகைத் தொகையை செலுத்த வேண்டும் எனவும், இதற்காக மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் தனி பிரிவை அமைக்க மதுரை மாநகராட்சி ஆணையருக்கு  உத்தரவிட்டனர். அவ்வாறு உறுதியளித்தவர்கள் மற்றும் நிலுவை வாடகைத் தொகையை செலுத்தியவர்கள் தொடர்பான  விபரங்களை நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யவும் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.