சென்னை முழுவதும் 1.50 லட்சம் சிசிடிவி கேமரா : 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு
பதிவு : டிசம்பர் 13, 2018, 09:50 AM
சென்னையில் காவல்துறையினர் சார்பில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, சென்னை மாநகரம் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் உள்ளது. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், நடந்த குற்றங்களில் குற்றவாளிகளைக் கைது செய்யவும் காவல்துறைக்கு பெரிதும் உதவியாக இருப்பது சிசிடிவி கேமராக்கள் தான்...

சுமார் ஒரு கோடி பேர் வசிக்க கூடிய சென்னையில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து காவல் துறைக்கு பெரிய தலைவலியை உண்டாக்கி வந்தன. குறிப்பாக இரவு நேரத்தில் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களை கண்டுபிடிப்பது காவல்துறையினருக்கு சவாலாகவே இருந்து வந்தது . 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க  சிசிடிவி கேமராக்களை சென்னை பெருநகர் முழுவதும் பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன் படி சென்னை பெருநகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை , ஒரு லட்சத்து 50 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு  24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மக்கள் அதிகம் கூடும் இடங்களான சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் எழும்பூர் இரயில் நிலையம் , கோயம்பேடு பேருந்து நிலையம், மெரினா கடற்கரை போன்ற பகுதிகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்களை பொருத்தி வருகின்றனர் சென்னை காவல்துறையினர். 

குறிப்பாக சென்னை சென்ட்ரல்  ரயில் நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் இரவில்  வண்ண விளக்குகளால் ஒளிவருவதால் குற்றசம்பவங்களில் ஈடுபடுபவர்களிடையே ஒரு பயத்தை உண்டாக்குகிறது

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4807 views

பிற செய்திகள்

சட்டமன்றத்தில் விஜயகாந்த் ஆவேசம் : நடந்தது என்ன?

"விஜயகாந்த் ஆவேச பேச்சுக்கு திமுகவே காரணம்" - பிரேமலதா

189 views

அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உள்ள விடுதிகளில், தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

14 views

சூடுபிடிக்கும் தேர்தல் களம் : நாடாளுமன்றத்திற்கு தேர்வான பெண் எம்.பி.க்கள்...

17 வது மக்களவை தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்ட பெண் எம்.பிக்கள் குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்.

10 views

தங்கம் கடத்தல் - சூடான் பெண் கைது

சென்னை விமான நிலையத்தில் 7 தங்க கட்டிகளை மறைத்து கடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.

24 views

இரவிலும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை...

சென்னையில் இரவிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

18 views

திருவள்ளுர் : சுவற்றை துளையிட்டு டாஸ்மாக் கடையில் கொள்ளை

திருவள்ளுர் மாவட்டம் செங்குன்றத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.