அரசாணை எரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது , ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் - செங்கோட்டையன்
பதிவு : டிசம்பர் 13, 2018, 01:01 AM
அரசாணை எரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது , ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் - செங்கோட்டையன்
ஈரோடு செங்கோடம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ஈரோடு மேற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.வி.ராமலிங்கம், ஈரோடு கிழக்கு சட்டமனற உறுப்பினர் தென்னரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அரசாணை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.