பள்ளிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு : கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய அறிவுறுத்தல்
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், பிளாஸ்டிக் ஒழிப்பு அவசியம் குறித்து கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், பிளாஸ்டிக் ஒழிப்பு அவசியம் குறித்து கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. 32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் இதில் பங்கேற்றனர். அனைத்து பள்ளிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. பிளாஸ்டிக் தெர்மாகோல், தேநீர் கோப்பைகள், புத்தக அட்டை, குடிநீர் பாட்டில், புத்தகப்பை, எழுதுகோல் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக, வாழை இலை, அலுமினியத்தாள், காகித சுருள், கண்ணாடியாலான குவளைகள், அலுமினிய எழுதுகோல் உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Next Story

