அடுத்த ஆண்டு 500 பேராவது மருத்துவப் படிப்பில் சேர்வார்கள் - அமைச்சர் செங்கோட்டையன்
அவசர கோலத்தில் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டதால், அதிகளவிலான அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டில், அவசர கோலத்தில் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டதால், அதிகளவிலான அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றும், அடுத்த ஆண்டில் குறைந்தது 500 மாணவர்களாவது மருத்துவ படிப்பில் சேர்வார்கள் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நீட் பயிற்சிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இருபது கோடி ரூபாயில் ஒரு ரூபாய் கூட செலவு செய்யப்படவில்லை என்றும், தனியார் கல்லூரிகளே அந்த செலவை ஏற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story