ரயில்வே துறையின் கவனக்குறைவால் பழுது அடைந்த பாம்பன் பாலம்

நூற்றாண்டைக் கடந்த பாம்பன் பாலம்
x
மண்டபத்தின்  நிலப்பகுதியையும் ராமேஸ்வரம் தீவு பகுதியையும் இணைக்கும் விதமாக  2 புள்ளி 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்ட ரயில் பாலத்தில் 1914 முதல்  ரயில் சேவை தொடங்கிய நிலையில்,  கடந்த 2014 ஆம் ஆண்டு வீசிய பலத்த காற்று காரணமாக பாம்பனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிதவைக் கப்பல் பாம்பன் பாலத்தில் மோதியது.  இதனால் 2 வாரத்திற்கு ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் ரயில் சேவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாலத்தை முறையாக பராமரிக்காத நிலையில், தற்போது மீண்டும் ரயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. ரயில்வே துறையின் அலட்சியமே தற்போதைய நிலைக்கு காரணம் என அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் தெரிவித்துள்ளனர். தீர்த்த யாத்திரைக்கு வரும் பக்தர்கள் மிகவும் இன்னல்களை சந்தித்து வருவதாக அப்பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்