ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து விழா துவக்கம்...

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், பகல் பத்து உற்சவம் விமர்சையாக தொடங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து விழா துவக்கம்...
x
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பகல்பத்து உற்சவம், பச்சை பரத்துதல் நிகழ்ச்சியோடு ஆரம்பமானது. அதில், தன்னை நந்தவனத்தில் இருந்து எடுத்து வளர்த்த தந்தையாகிய பெரியாழ்வாரின் வீட்டிற்கு, ஆண்டாள், ரெங்கமன்னாருடன் வருகை தந்து சீர் வாங்கிச் சென்றார்.
அப்போது, ஜதீகப்படி, பச்சை காய்கறிகளை பரப்பி அவற்றை சுவாமிகளை பார்க்க செய்தனர்.  இந்த காய்கறிகளை தங்கள் வீடுகளுக்கு எடுத்து சென்றால் செல்வம் பெருகும் என மக்கள் நம்புவதால், அங்கு வந்திருந்த திரளான பக்தர்கள் போட்டிபோட்டுக் கொண்டு காய்கறிகளை எடுத்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்