மருமகனை வெட்டிக்கொன்ற வழக்கு : மாமனாருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறை ரத்து

குடித்துவிட்டு மகளுடன் தகராறு செய்த மருமகனை வெட்டி கொன்ற மாமனாருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
மருமகனை வெட்டிக்கொன்ற வழக்கு : மாமனாருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறை ரத்து
x
ஈரோடு மாவட்டம் மாமரத்துப்பாளையத்தை சேர்ந்த தங்கவேலு என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு,  தனது மகளிடம் குடித்துவிட்டு தகராறு செய்த மருமகன் பாலகிருஷ்ணனை அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.  தங்கவேலுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தங்கவேலு இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், ,  தங்கவேலுக்கு எதிரான குற்றச்சாட்டை காவல்துறையினர் நிரூபிக்க தவறிவிட்டதாக கூறி அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்