10 நாட்களில் எளியமுறையில் தீவன பயிர் வளர்ப்பு : வேளாண் பட்டதாரி சாதனை

ஓமலூரை சேர்ந்த வேளாண் பட்டதாரி ஒருவர் எளிமையான முறையில் கறவை மாடுகளுக்கு தேவையான தீவனப் புல்லை வளர்த்து வெற்றி கண்டுள்ளார்.
10 நாட்களில் எளியமுறையில் தீவன பயிர் வளர்ப்பு : வேளாண் பட்டதாரி சாதனை
x
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த வேளாண் பட்டதாரி  தினகரன் தீவனப்புல் வளர்ப்பதற்கான எளிய முறையை கையாண்டுள்ளார். அதன்படி பல அடுக்குகளை கொண்ட பிளாஸ்டிக் தட்டுக்களில் 
ஊறவைத்த மக்காச்சோளத்தை விதைத்து, பின்னர் அதன் மேல் ஈரத்துணி கொண்டு மூடப்படுகிறது. ஈரம் காயும் போதெல்லாம் தண்ணீர் தெளித்தால், 10 நாட்களில் மக்கா சோளப்பயிர் கிடைக்கும் 
எனவும் அவற்றை தீவனப்பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் பயன்படுத்தலாம் எனவும் அவர் கூறியுள்ளார். இதேபோன்று கேழ்வரகு, கம்பு, கொள்ளு போன்ற பயிர்களையும் வளர்த்து மாடுகளுக்கு 
தீவனமாக பயன்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்