போலி ஆவணங்கள் மூலம் ரூ.18 கோடி கடன் மோசடி- கடன் பெற உதவிய வங்கி மேலாளர் கைது

திருப்பூரில் போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் 18 கோடி ரூபாய் கடன் பெற்றவர்களுக்கு உடந்தையாக இருந்த வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டார்.
போலி ஆவணங்கள் மூலம் ரூ.18 கோடி கடன் மோசடி- கடன் பெற உதவிய வங்கி மேலாளர் கைது
x
திருப்பூரில் போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் 18 கோடி ரூபாய் கடன் பெற்றவர்களுக்கு  உடந்தையாக இருந்த வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டார்.திருப்பூரை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் , வங்கிக்கடன் தேவைப்படும்  பின்னலாடை நிறுவனங்களை தொடர்பு கொண்டுள்ளார். அவர்களிடம் வாங்கிய சான்றிதழ்களை மாற்றி போலி ஆவணங்கள் தயார்செய்து 18 கோடி ரூபாய் வங்கியில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. 
இந்த வழக்கில் செந்தில் குமார் மற்றும் அவரது மனைவியை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர். இதனையடுத்து அவர்களுக்கு உதவிய வங்கி மேலளர் சங்கர் தலைமறைவானார். இந்த நிலையில் சங்கரை மாநகர குற்றப் பிரிவு போலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்