அமராவதி, மணிமுத்தாறு அணையிலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு
திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து, 10 கால்வாய் பாசன பகுதிகளுக்கு, வருகிற 12 ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை, இடைவெளி விட்டு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து, 10 கால்வாய் பாசன பகுதிகளுக்கு, வருகிற 12 ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை, இடைவெளி விட்டு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் பழனிசாமி ஆணையிட்டுள்ளார். இதன் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 47 ஆயிரத்து 117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவித்துள்ளார். இதே போல், மணிமுத்தாறு பிரதான கால்வாயில் இருந்து, வருகிற 11 ந்தேதி முதல் 2019 மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை, தண்ணீர் திறக்க ஆணையிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 ஆயிரத்து 18 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
Next Story