ஸ்டெர்லைட்- பரபரப்பு வாதம்- ஒத்திவைப்பு

ஸ்டெர்லைட் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை திங்கள் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட்- பரபரப்பு வாதம்- ஒத்திவைப்பு
x
* ஸ்டெர்லைட் ஆலையை மூடி, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது. ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட தருண் அகர்வால் குழு, தனது அறிக்கையை தாக்கல் செய்தது.

* இதனிடையே ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கு, பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் இடை மனுதாரராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் ஆஜரானார்.

* விசாரணையின் தொடக்கத்தில் தமிழக அரசு தரப்பின் வாதத்தை முதலில் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. 

* அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்பதாக தெரிவித்த நீதிபதிகள், முதலில் மனுதாரரான ஸ்டெர்லைட்  தரப்பு வாதத்தை கேட்டனர். சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே தருண் அகர்வால் குழு அமைக்கப்பட்டதாக தெரிவித்த ஸ்டெர்லைட் தரப்பு,

* ஆலையை மூட, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளதால், தமிழக அரசின் அரசாணை ஏற்புடையதல்ல என்றும் வாதிட்டது.

* ஸ்டெர்லைட் போராட்டத்தின் பின்னணியில் தீவிரவாத அமைப்புகள் உள்ளதாக ஸ்டெர்லைட் நிர்வாகம் குற்றம்சாட்டியது. அதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழக அரசு தரப்பு, தாங்கள் ஒருபோதும் அவ்வாறு சொல்லவில்லை என தெரிவித்தது.

* தூத்துக்குடி மக்களின் குடிநீர், சுகாதார வசதிகள் மற்றும் பள்ளிகளுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக ஸ்டெர்லைட் தரப்பு தெரிவித்தது.தமிழக அரசின் அரசாணை செல்லாது என்று அறிவித்த அகர்வால் அறிக்கையை ஏற்க முடியாது என்று வாதிட்ட தமிழக அரசு,

* ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை நீதிமன்றத்தில் மட்டுமே எதிர்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தது. இதையடுத்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, வழக்கு திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்