சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 'பிளாக் பக்' மான்கள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வெளி மான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பிளாக் பக் மான்கள்
x
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வெளி மான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மிகப்பெரிய புலிகள் காப்பகமான சத்தியமங்கலத்தில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. இங்குள்ள, தெங்குமரஹடா வனப்பகுதியில், ஏராளமான 'வெளி மான்கள்' வசித்து வருகின்றன. மாயாற்றை ஒட்டிய பகுதியில் இந்த மான்களின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. 'பிளாக் பக்' எனும் இந்த வகை மான்கள், தமிழகத்திலேயே இங்குதான் அதிகமாக உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். புலி, சிறுத்தை போன்றவற்றுக்கு வெளி மான்கள், மிகவும் பிடித்த உணவு என கூறப்படுகிறது. வனப்பகுதி சாலையோரத்தில், நடமாமும் வெளிமான்களை, அந்த வழியாக செல்பவர்கள் பார்த்து ரசிக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்