மகளிர் விடுதி விவகாரம் : போலீசில் சஞ்சீவி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்

சஞ்சீவி அளித்த வாக்குமூலத்தில் அதிர்ச்சியான தகவல்களை தெரிவித்துள்ளதால் அவரை காவலில் எடுத்த விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மகளிர் விடுதி விவகாரம் : போலீசில் சஞ்சீவி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்
x
* சென்னை ஆதம்பாக்கத்தில் கைதான சஞ்சீவி, சிவில் என்ஜினீயர் எனவும் 10 ஆண்டுகளாக கட்டுமான தொழிலில் உள்ள இவர், கடந்த 2012ம் ஆண்டு  மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் மோசடி புகாரில் கைது செய்யப்பட்டவர் எனவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.  

* அந்த வழக்குக்கு பிறகு, ஆதம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பை 24 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு எடுத்ததாகவும், அங்கு தனது குழந்தைகளுக்கு பிரபல பள்ளியில் இடம் கிடைக்காததால் அஸ்தினாபுரம் சென்றதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். 

* அதன்பிறகு, ஆதம்பாக்கம் வீட்டை பெண்கள் தங்கும் விடுதியாக மாற்றியதாகவும், ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து தலா 7 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு 6 பெண்கள் வந்ததாகவும் கூறியுள்ளார். 

* அந்த பெண்கள் அனைவரும் பகலில் வேலைக்கு சென்று விடுவதால், அந்த சமயத்தில், தனது கட்டுமான நிறுவனத்தின் அலுவலகமாக விடுதியை பயன்படுத்திக் கொண்டதாகவும் சஞ்சீவி தெரிவித்துள்ளார். 

* இதற்கு முன்பு, கட்டுமான நிறுவனம் நடத்தியபோது தன்னிடம் வேலை பார்த்த 30க்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு வைத்திருந்ததாகவும், அதை வீடியோவில் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் அதிர்ச்சி தகவலை வாக்குமூலத்தில் கூறியுள்ளார். 

* அதுபோலவே, விடுதியில் தங்கி உள்ள பெண்களையும் தனது பாலியல் ஆசைக்கு சம்மதிக்கச் செய்வதற்காக, ரகசிய கேமராக்களை வைத்ததாகவும், அரைகுறை ஆடைகளில் இருப்பதை படம் பிடித்து மிரட்டி, தனது ஆசையை பூர்த்தி செய்யலாம் என திட்டமிட்டதாகவும் சஞ்சீவி தெரிவித்துள்ளார்.  

* இதற்காக, 'வைஃபை' மூலம் இயங்கும் 9 நவீன ரக சிறிய கேமராக்களை ஆன்லைன் மூலம் வாங்கியதாகவும், அவற்றின் விலை தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் எனவும் கூறியுள்ளார். 

* 'வை-பை' மூலமாக இயக்கி ஆபாச காட்சிகளை பார்க்கும் வசதி கொண்ட இந்த கேமராக்கள், ஆட்கள் நடமாடும் சத்தம் இருந்தால் மட்டுமே காட்சிகளை பதிவு செய்யும் வசதி கொண்டத எனவும் பெண்கள் அனைவரும் வேலைக்கு சென்ற பிறகு, குளியல் அறைகள், படுக்கை அறைகளில் தானே சென்று கேமராக்களை ரகசியமாக பொருத்தியதாகவும் பல அதிர்ச்சி தகவல்களை சஞ்சீவி தெரிவித்துள்ளார். 

* சஞ்சீவியை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ள போலீசார், அவரை போலீஸ் காவலில் எடுத்த விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்