ஜெயலலிதா 2ஆம் ஆண்டு நினைவுதினம் - ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி

அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே இருந்து அ.தி.மு.க. சார்பில் பிரமாண்ட பேரணி தொடங்கியது.
x
அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே இருந்து அ.தி.மு.க. சார்பில் பிரமாண்ட பேரணி தொடங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அ.தி.மு.க மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கருப்பு சட்டை அணிந்து பேரணியில் பங்கேற்றனர். வாலாஜாசாலை, சேப்பாக்கம் வழியாக ஜெயலலிதா நினைவிடம் நோக்கி பேரணி சென்றது. அங்கு பல வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 

"சிறந்த நல்லாட்சியை வழங்கியவர் ஜெயலலிதா"- துரைகருணா, பத்திரிக்கையாளர்


ஜெயலலிதா 2ஆம் ஆண்டு நினைவுதினம் : மூத்த பத்திரிகையாளர் ரமேஷ் கருத்து 


ஜெயலலிதா 2ஆம் ஆண்டு நினைவுதினம் : மூத்த பத்திரிகையாளர் மாலன்  கருத்து


ஜெயலலிதா 2ம் ஆண்டு நினைவுதினம் : பன்னீர்செல்வம் தலைமையில் கட்சியினர் உறுதிமொழி ஏற்பு


ஜெயலலிதா நினைவிடம் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் வாசிக்க, முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.  


Next Story

மேலும் செய்திகள்