இன்று நடக்கிறது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் : மேகதாது அணை பிரச்சினை குறித்து பேசப்படுமா?

இன்று நடக்கும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், மேகதாது அணை பிரச்சினையை எழுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இன்று நடக்கிறது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் : மேகதாது அணை பிரச்சினை குறித்து பேசப்படுமா?
x
காவிரி ஆற்றின் குறுக்கேயுள்ள மேகதாது என்னுமிடத்தில், சுமார் ஐயாயிரம் கோடி ரூபாய் செலவில், புதிய அணை ஒன்றை கட்ட மத்திய நீர் ஆணையத்திடம், கர்நாடக அரசு அனுமதி கேட்டிருந்தது. அணைக்கான சாத்தியக் கூறு அறிக்கையை தயாரிக்க, கர்நாடக அரசுக்கு நீர் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது. ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்ரமணியன், உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, காவிரியில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு, அணைகளின் நீர் இருப்பு உள்ளிட்டவை குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. மேலும், கூட்டத்தில், மேகதாது அணை பிரச்சினையும் எழுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

Next Story

மேலும் செய்திகள்