குட்டி யானையை வனப்பகுதியில் விட கோரும் வழக்கு : மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குட்டி யானைக்கு மருத்துவப் பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய, மருத்துவக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குட்டி யானையை வனப்பகுதியில் விட கோரும் வழக்கு : மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
x
கடந்த 2017-ம் ஆண்டு கோவை மாவட்டம் மங்காரை வனப்பகுதியிலிருந்து 3 வயதுள்ள ஒரு குட்டி யானை ஊருக்குள் புகுந்தது. இதையடுத்து, அந்த குட்டி யானை முகாமில் அடைக்கப்பட்டது. அந்த குட்டி யானையை கும்கி யானையாக மாற்ற வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும், யானையை மீண்டும் வனப்பகுதியில் விட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் அம்ரவு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. குட்டி யானை அதன் கூட்டத்தோடு சேர்க்கும் முயற்சிகள் தோல்வியடைந்ததால், முகாமில் வைக்கப்பட்டு, உரிய முறையில் பராமரிக்கப்படுவதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, குட்டி யானையை ஆய்வு செய்து பரிசோதனை அறிக்கையை, மருத்துவக் குழு 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்