குடும்ப சூழலால் சாலையோர உணவகத்தில் வேலை பார்க்கும் மருத்துவ மாணவி

மகளின் மருத்துவ கனவை நிறைவேற்ற முயன்று அதிக கடன் வாங்கி, மளிகை கடை நடத்தி வந்த ஒரு குடும்பம், தொழில் நஷ்டம் காரணமாக, சாலையோரத்தில் உணவகம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
x
மகளின் மருத்துவ கனவை நிறைவேற்ற முயன்று அதிக கடன் வாங்கி, மளிகை கடை நடத்தி வந்த ஒரு குடும்பம், தொழில் நஷ்டம் காரணமாக, சாலையோரத்தில் உணவகம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து வந்த ஒரு மருத்துவ மாணவி, தன் படிப்பை பாதியில் விட்டு விட்டு இன்று சென்னை சாலையோர தள்ளுவண்டி உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். 

வெளிநாட்டில் அதிக பணம் கொடுத்து தன் மகளை மருத்துவம் படிக்க வைக்க முடியும் என்ற எண்ணத்தில் இருந்த பெற்றோர் இன்று தன் மகளின் நிலையை பார்க்க முடியாமல் கண்ணீர் வடிக்கின்றனர்... 

25 லட்ச ரூபாய் பணம் கொடுத்து வெளிநாட்டில் தன் மகள் கிருபாவை மருத்துவம் படிக்க வைக்க முடியும் என எண்ணிய சென்னையை சேர்ந்த பழனிசாமிக்கு தொழிலில் அடுத்தடுத்து சறுக்கல்கள். அடுத்தடுத்த இழப்புகளை எதிர்கொள்ள முடியாத சூழல், கிருபாவுக்கு அடுத்து இருக்கும் 2 மகள்கள் என காலச்சக்கரம் வேறு திசை நோக்கி சுழன்றது. 

ப்ளஸ் 2வில் 980 மதிப்பெண்கள் பெற்று அதிக பணம் கொடுத்து மருத்துவ படிப்பை படித்துவிடலாம் என்ற எண்ணத்துடன் இருந்த கிருபாவின் கனவு இன்று பாதியிலேயே நின்றிருக்கிறது. பூர்வீக சொத்துகளை விற்றாலும் கூட மருத்துவம் படிப்பதற்கான பணம் முழுமையாக கிடைக்கவில்லை. 

டீ கேனை சைக்கிளில் எடுத்துச் சென்று விற்பனை செய்யும் தந்தை, தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தும் தாய், குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு செல்லும் ஒரு தங்கை, பள்ளியில் படிக்கும் மற்றொரு தங்கை என உள்ள குடும்ப சூழல் இவர்களுடையது. அன்றாட உணவுக்கே இவர்களின் வருமானம் போதாத சூழலில் மருத்துவ படிப்பை தொடர முடியாத கிருபாவின் நிலை பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 

இதனால் தன் மருத்துவ படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு இன்று சென்னை பழவந்தாங்கல் பகுதியில் தன் பெற்றோருடன் சாலையோர உணவகத்தில் வேலை பார்த்து வரும் காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்திருக்கிறது... 

Next Story

மேலும் செய்திகள்