தானியங்கி கதவுகளுடன் புறநகர் ரயில் பெட்டிகள் தயாரிக்க வேண்டியது அவசியம் - தெற்கு ரயில்வேக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

தானியங்கி கதவுகளுடன் புறநகர் ரயில் பெட்டிகளை 2019ஆம் ஆண்டுக்குள்ளாவது அமைக்க வேண்டும் என தெற்கு ரயில்வேக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தானியங்கி கதவுகளுடன் புறநகர் ரயில் பெட்டிகள் தயாரிக்க வேண்டியது அவசியம் - தெற்கு ரயில்வேக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்
x
சென்னை பரங்கிமலையில் மின்சார ரயிலில் படிக்கட்டில் பயணித்த பயணிகள், தடுப்புச் சுவரில் மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து கடந்த ஜூலை மாதம், புறநகர் மின்சார ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்க கோரி சதீஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, புதிதாக தயாரிக்கப்படும் புறநகர் ரயில் பெட்டிகளில் தானியங்கி கதவுகள் அமைக்கப்பட வேண்டியது அவசியமானது என நீதிபதிகள் தெரிவித்தனர். 2019ஆம் ஆண்டுக்குள்ளாவது புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்