பெற்ற கடனை திருப்பி செலுத்தாததால் ஆள் கடத்தல், 10 லட்சம் கேட்டு மிரட்டல் - 4 பேர் கைது

நீண்ட நாட்கள் பெற்ற கடனை திருப்பி செலுத்தாததால் கடத்தல்
பெற்ற கடனை திருப்பி செலுத்தாததால் ஆள் கடத்தல், 10 லட்சம் கேட்டு மிரட்டல் - 4 பேர் கைது
x
ஈரோடு மாவட்டம் கரட்டுபாளையத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் வெங்கடேஷ்வரன், மகாதேவன் என்பவரிடம் 4 லட்சம் ரூபாயை கடனாக பெற்றுள்ளார். நீண்ட நாட்கள் கடந்தும் பெற்ற பணத்தை திருப்பி தராததால் கோபமடைந்த மகாதேவன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து வெங்கடேஷ்வரனை கடத்தியுள்ளனர். பின்னர் அவரது மனைவி சுந்தரியிடம் 10 லட்சம் ரூபாய் பணத்தை தரும்படி போன் மூலம் மிரட்டியுள்ளார். இதுகுறித்து சுந்தரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, கோபிசெட்டிபாளையத்தில் வெங்கடேஸ்வரன் மீட்ட போலீசார் மகாதேவன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரை கைது செய்து, பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்