இலவச டயாலிசிஸ் சிகிச்சை மையம் : தினமும் 20 பேர் பயன்பெறுகிறார்கள்

சென்னை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவச டயாலிசிஸ் மையம் செயல்படுவதால் தினமும் 20க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகிறார்கள்.
x
பொன்னேரியை அடுத்த ரெட்டேரி லட்சுமிபுரத்தில் சென்னை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரோட்டரி கிளப், டேங்கர் ஃபவுண்டேஷன் என்ற தன்னார்வ அமைப்புடன் இணைந்து சென்னை மாநகராட்சி மக்களுக்கு இலவசமாக டயாலிசிஸ் சிகிச்சையை அளித்து வருகிறது.

சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்வதற்கு சுமார் 2 ஆயிரம் ரூபாய் முதல் 3,500 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. வாரம் இரு முறையேனும் ரத்த சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆனால் டயாலிசிஸ் சிகிச்சைக்கான கட்டணம் ஒருமுறைக்கு ஆயிரக்கணக்கில் வசூலிக்கப்படுவதால் நடுத்தர மற்றும் ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணம் செலவழித்து சிகிச்சை பெற முடிவதில்லை.

இதனை கருத்தில்கொண்டு சென்னை மாநகராட்சி தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் இலவசமாக , இந்த சேவையை செய்து வருகிறது. இதனால் ஏராளமானோர் பயன்பெற்று வருகிறார்கள். ரெட்டேரி பகுதியில் இலவசமாக டயாலிசிஸ் மையம் தொடங்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆன நிலையில் மாதம்தோறும் சுமார்  4 ஆயிரம் பேர் பயன்பெறுகிறார்கள்.

இதேபோல், சென்னையில் இலவச டயாலிசிஸ் மையங்கள் திருவேற்காடு, முகப்பேர், அம்பத்தூர் உள்ளிட்ட மூன்று இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மற்ற பகுதிகளிலும் சேர்த்து தமிழகத்தில் ஏழு இடங்களில் செயல்பட்டு வருவதால் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட உதவியாக இருப்பதாக நோயாளிகளுக்க  தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்