தந்தை படும் கஷ்டத்தை பார்த்து கண்ணீர் வடித்த மகள்...

குடும்ப சூழலால் பாதிக்கப்பட்ட மாணவியின் நிலையை அறிந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், அவருக்கு பசுமை வீடு கட்டித் தருவதற்கான ஆணையை வழங்கினார்.
x
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த நெடுங்கல் கிராமத்தை சேர்ந்த ரூபிகா என்ற மாணவி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். தங்கள் குடும்பம் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒரு கட்டுரை எழுதி வர சொன்னபோது, சிறுமி ரூபிகா கண்ணீரோடு தன் தந்தையை பற்றியும் குடும்ப சூழல் பற்றியும் விளக்கியுள்ளார். இதனை பார்த்த தலைமை ஆசிரியர் இந்த காட்சியை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ளார். இதனை பார்த்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாணவியின் நிலையை புரிந்து கொண்டதோடு அவரின் வீட்டிற்கு நேரடியாக சென்றுள்ளார். மாணவியின் தந்தைக்கு 30ஆயிரம் ரூபாய் மதிப்பில் 4 ஆடுகளை வழங்கியதோடு, அவர்கள் வாழ்வதற்கு 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பசுமை வீடுகளை கட்டிக் கொள்வதற்கான ஆணையையும் வழங்கினார். ஆட்சியரின் இந்த செயலுக்கு மாணவியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்