லித்தியம் பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனம்

நாட்டிலேயே முதல் முறையாக லித்தியம் பேட்டரியால் இயங்கும் ஜப்பான் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட இருசக்கர வாகனம் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
லித்தியம் பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனம்
x
"ஹஷிகோ க்ரீன் வீல்" எனும் நிறுவனம் லித்தியம் பேட்டரியின் மூலம் இயங்கும் புதிய வகை நவீன இரு சக்கர வாகனங்களை தயாரித்து வருகிறது. ஜப்பான் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட  இந்த இருசக்கர வாகன அறிமுக நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. வாகனத்தை அறிமுகப்படுத்திய அந்நிறுவன செயல் அதிகாரி, ஒரு மணி நேரம் பேட்டரியை சார்ஜ் செய்தால் வாகனத்தை 200 கிலோ மீட்டர் வரை இயக்க முடியும் என்றும் ஆரம்ப விலையாக 39 ஆயிரம் ரூபாய் முதல் 3 வகை வாகனங்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்