தலைக்கவசம் அணியாமல் வந்த நபர் - போலீசார் நிறுத்த முயற்சித்தபோது விபத்து

தூத்துக்குடியில் தலைக்கவசம் அணியாமல் வந்தவரை, போலீசார் தடுத்து நிறுத்த முயற்சித்தபோது பேருந்தில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
தலைக்கவசம் அணியாமல் வந்த நபர் - போலீசார் நிறுத்த முயற்சித்தபோது விபத்து
x
தூத்துக்குடி 3ஆம் கேட் பாலம் ரவுண்டானா பகுதியில் மத்திய பாகம் போலீசார் இரு சக்கர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த முப்பிடாதி என்பவரை போலீசார் நிறுத்த முயன்றபோது அவர் திரும்பியுள்ளார். 

அந்த சமயத்தில், அங்கு வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து மோதியதில் முப்பிடாதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்