ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் இன்று அரசு பேச்சுவார்த்தை

வேலை நிறுத்தம் அறிவித்துள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகளை தமிழக அரசு இன்று பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது.
ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் இன்று அரசு பேச்சுவார்த்தை
x
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை இன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. 

மூத்த அமைச்சர்கள் மற்றும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளிடையே இன்று தலைமைச் செயலகத்தில் நடக்கும் பேச்சுவார்த்தை முடிவில் வேலை நிறுத்த அறிவிப்பு ரத்தாகுமா, அல்லது திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறுமா என்பது குறித்து தெரிய வரும். இந்த நிலையில் முக்கிய கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு உடனடியாக அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்