தண்ணீர் மூலம் இயங்கும் இருசக்கர வாகனம் : 9-ஆம் வகுப்பு மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு

தண்ணீரில் உள்ள வேதி பொருட்களை பயன்படுத்தி இருசக்கர வாகனத்தை இயக்கிய காட்டி ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர் அசத்தியுள்ளார்
x
திருவண்ணாமலை காந்தி நகரில் உள்ள தனியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அதில், பங்கேற்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் புவனேஷ்குமார், தண்ணீரில் உள்ள ANODE மற்றும் CATHODE வேதி பொருட்களை பயன்படுத்தி இருசக்கர வாகனத்தை இயக்கி காட்டினார். ELECTROLYSIS சுழற்சியின் மூலம் கிடைக்கப்பெறும் HYDROGEN மற்றும் OXYGEN-ஐ இருசக்கர வாகனத்தில் உள்ள கார்பன்டரில் செலுத்தினால் வாகனம் செயல்படும் என்று மாணவர் விளக்கினார். இதற்கு இருசக்கர வாகனத்தில் உள்ள பேட்டரியில் இருந்து மின் இணைப்பு கொடுக்க வேண்டும் என்றும் 1 லிட்டர் தண்ணீரில் 40 கிலோ மீட்டர் வரை செல்ல முடியும் என்றும் மாணவர் புவனேஷ்குமார் தெரிவித்தார். மாணவனின் இத்தகைய கண்டு பிடிப்பு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது குறிப்படத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்