ஒக்கி புயலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

"ஒக்கி" புயலில் உயிரிழந்த மீனவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஒக்கி புயலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
x
"ஒக்கி" புயலில் உயிரிழந்த மீனவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்தாண்டு ஒக்கி புயலின் கோரத்தாண்டவத்தால், ஏராளமான சேதம் ஏற்பட்டது. குளச்சல், தூத்தூர், வல்லவிளை, இனையம், புத்தன்துறை, முட்டம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் உள்பட 204 பேர் மாயமான நிலையில், 27-மீனவர் உடல் மட்டுமே மீட்கப்பட்டது.  இந்நிலையில்,  "ஒக்கி" புயல் ஏற்பட்டு ஓராண்டு நிறைவு தினமான இன்று புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  இதில் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள்  தங்கள் குடும்பத்தினர் உடன் வந்து அஞ்சலி செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்