மறைந்த ஐராவதம் மகாதேவனுக்கு புகழஞ்சலி : தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள் பங்கேற்பு...

மறைந்த ஐராவதம் மகாதேவனுக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுச்சேரியில் நடைபெற்றது.
x
மறைந்த மூத்த பத்திரிக்கையாளரும், தொல்லியல் அறிஞருமான ஐராவதம் மகாதேவனுக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுச்சேரியில் நடைபெற்றது. மணற்கேணி ஆய்விதழ் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதன் ஆசிரியர் ரவிக்குமார் மற்றும் பேராசிரியர்கள், அறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  ஐராவதம் மகாதேவனின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய  ரவிக்குமார், தமிழின் தொன்மையை உலகமெல்லாம் அறிய செய்தவர் ஐராவதம் மகாதேவன் என புகழாரம் சூட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்