தீவிரம் காட்டாத வடகிழக்கு பருவ மழை : கோடையை சமாளிக்குமா சென்னை மாநகரம் ?

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் 1 புள்ளி 7 டி.எம்.சி தண்ணீரே இருப்பு உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 2.8 டி.எம்.சி தண்ணீர் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது
x
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில்  மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி தண்ணீர்சேமித்து வைக்கலாம்.  தற்போது இந்த நான்கு ஏரிகளையும் சேர்த்து மொத்த நீர்மட்டம்  ஆயிரத்து 775  மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான மூன்று ஆயிரத்து 231 மில்லியன் கன அடியில்,  தற்போது நிலவரப்படி  நீர் இருப்பு 389 மில்லியன் கன அடி தான்  உள்ளது.  புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடியில், தற்போது ஆயிரத்து 143 மில்லியன் கனஅடி நீர்  உள்ளது.  செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடியில் தற்போது நீர் இருப்பு 203 மில்லியன் கன அடி மட்டுமே இருக்கிறது. , சோழவரம் ஏரியின் மொத்த  கொள்ளளவான ஆயிரத்து 81 மில்லியன் கனஅடியில் தற்போது,   நீர் இருப்பு  40 மில்லியன் கன அடியாக உள்ளது.  கடந்த வருடம் இதே நாட்களில் இந்த நான்கு ஏரிகளிலும் மொத்தமாக நீர்  இருப்பு 4 ஆயிரத்து 501 மில்லியன் கன அடியாக இருந்தது. சென்னையில் இந்த வருடம் ஆரம்பம் முதலே வடகிழக்கு பருவ மழை தீவிரம் காட்டாததே 4 ஏரிகளில் தண்ணீர் அளவு குறைவாக இருப்பதற்கு காரணம் எ​ன்றும்,  இனி வரும் நாட்களில் வட கிழக்கு பருவ மழை போதுமான அளவு பெய்தால் மட்டுமே  கோடைக் காலத்தில் சென்னை மக்களை குடிநீர் தட்டுபாட்டில் இருந்து  காப்பாற்ற முடியும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்