நிவாரணம் தொடர்பாக மத்திய அரசு தான் முடிவு செய்யும் - மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட்

கஜா புயல் பாதிப்பு குறித்து 2-வது நாளாக ஆய்வு நடத்தி வரும் மத்திய குழுவினர், இன்று தஞ்சை மாவட்டத்தில் சேத பகுதிகளை பார்வையிட்டனர்.
x
* கடந்த 16-ம் தேதி சுழன்று அடித்த காஜா புயலில் நாகை, கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புயல் பாதிப்பு குறித்த சேதங்களை மதிப்பிட தமிழகம் வந்துள்ள  மத்திய குழுவினர், நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தினர். 

* இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் இன்று அவர்கள் ஆய்வு நடத்தினர். ஒரத்தநாட்டை அடுத்த புதூர் கிராமத்திற்கு சென்ற மத்திய குழுவினர்,  அங்கு சேதம் அடைந்த வீடுகளை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து புலவன்காடு கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள், மற்றும் தென்னந்தோப்புகளை அவர்கள் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து பட்டுகோட்டை அருகே ஆலடிக்குமுளை கிராமத்திற்கு சென்ற மத்திய குழுவினர்,  சேதங்களை பார்வையிட்டனர். 

* இதனையடுத்து தஞ்சை மாவட்டத்தின் கடற்கரை பகுதியான மல்லிப் பட்டினம் பகுதியில் மத்திய ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்தனர். உடைந்து போன படகுகள், சிதைந்து போன வலைகள், சேதமடைந்த மீனவ கிராமங்களை பார்வையிட்டனர். அங்கிருந்த மீனவர்களிடம் புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.

* இத்துடன் தஞ்சை மாவட்டத்தில் ஆய்வை முடித்து கொண்ட மத்தியக் குழுவினர், தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு செய்ய கிளம்பி சென்றனர். 


Next Story

மேலும் செய்திகள்