"ஜெயலலிதா இருப்பதை போல துரிதமாக நிவாரணப் பணி" - பன்னீர்செல்வம்

ஜெயலலிதா இருக்கும் போது எப்படி பணியாற்றுவோமோ..அதே போல தான் கஜா புயல் பாதிப்புகளை அகற்ற, தற்போதும் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருவதாக கூறினார்.
x
தஞ்சை மாவட்டத்தில் கஜா புயல் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், துரைக்கண்ணு, உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, எம்.பி. வைத்தியலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் போது எப்படி பணியாற்றுவோமோ.. அதே போல தான் கஜா புயல் பாதிப்புகளை அகற்ற, தற்போதும் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருவதாக கூறினார். மேலும் சாலைகளில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரண்டு, மூன்று நாட்களுக்குள் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும் என்றும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்