யோகவேல் ஏந்தி காட்சி தரும் ஊத்துமலை முருகப் பெருமான்

சேலம் அருகே யோகவேல் ஏந்தி கந்தன் உறைந்திருக்கும் இடமான ஊத்துமலை முருகன் கோயில் சிறப்புக்கள்
x
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள ஊத்துமலையில் இருக்கிறது இந்த முருகன் கோயில். ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில் இது என்கிறது வரலாறு. ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயில், அகத்திய முனிவர் வழிபட்ட தலம் என்பதற்கான கல்வெட்டுகளும் உள்ளது. ஊத்துமலையில் காட்சி தரும் முருகன் ஸ்ரீபாலசுப்ரமணிய சுவாமியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கையில் யோகவேல் ஏந்தி முருகன் காட்சி தரும் தலம் இது என்பது கோயிலின் சிறப்பு. 

இதனால் முருகப் பெருமான் தன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு பல்வேறு யோகங்களையும் நற்பேறுகளையும் அருள்வார் என்ற நம்பிக்கை உண்டு. இயற்கையான சூழலில் மலைப்பகுதியில் காட்சி தரும் இந்த கோயிலுக்கு பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். முருகனுக்கு உகந்த பண்டிகைகளான தைப்பூசம், கிருத்திகை, சஷ்டி போன்ற நாட்களில் இங்கு சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடப்பது வழக்கம். பங்குனி உத்திர பெருவிழாவின் போது இந்த கோயிலில் நடக்கும் பால்காவடி விழா பிரசித்தம்.

சிவபூஜைக்காக அகத்திய முனிவர் 7 இடங்களில் நீர் ஆதாரங்களை உருவாக்கினார். அந்த 7 இடங்களில் இன்றும் தீர்த்தம் உருவாகி வருவதாகவும், அது சப்தசாஹர தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தம் உருவாகும் இடங்களில் மூலிகைகளும் இருப்பதால் பல மருத்துவ குணங்கள் கொண்ட இந்த மூலிகை தீர்த்தம் மக்களின் நோய்களை குணப்படுத்தும் என்ற நம்பிக்கையும் உள்ளது. 

அதேபோல் கோயிலின் உள்ளே முருகனை வழிபட அகத்தியர் அமைத்த குகையையும் பக்தர்கள் வணங்கிச் செல்கின்றனர். மொத்தத்தில் இயற்கையையும் இறைவனையும் தரிசிக்க ஏற்ற இடமாக இருக்கிறது ஊத்துமலை முருகன் கோயில்.

Next Story

மேலும் செய்திகள்