மனைவியை காப்பாற்ற சென்ற கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்தார்.
மனைவியை காப்பாற்ற சென்ற கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
x
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்தார். அங்குள்ள தலக்குளம் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் சேகர், அதே பகுதியை சேர்ந்த புனிதா என்ற பெண்ணை 5 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்தார். பெற்றோர் ஏற்காததால், மனைவியின் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், வீட்டின் அருகே துணியை உலர்த்தியபோது, புனிதா மீது மின்சாரம் தாக்கியுள்ளது. அவரது அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த சேகர், மனைவியை காப்பாற்றியுள்ளார். அப்போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்ததால், அந்த இடத்திலேயே உயிரிழந்தார். காதல் மனைவியை காப்பாற்றி விட்டு கணவர் உயிரிழந்ததால், அந்த பகுதியில் சோகம் நிலவுகிறது.  

Next Story

மேலும் செய்திகள்