மண் குளியல் சிகிச்சையால் நோய்கள் குணமாகுமா?

பல்வேறு நோய்களுக்கு மண் சிகிச்சை தீர்வளிப்பதாக சென்னைவாசிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
x
நீராவிக் குளியல், வாழை இலைக் குளியல், சன் பாத் என விதவிதமான பெயர்களை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உடலில் மண்ணை பூசி குளித்தால் நோய்கள் குணமாகும் என்பதை நிரூபித்திருக்கிறது சென்னையை சேர்ந்த அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்த மையத்தில் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுவோர் பலருக்கும் மண் குளியல் சிகிச்சையே வழங்கப்படுகிறது. காரணம் இயற்கையான முறையில் கிடைக்கப்படும் இந்த மண் எந்த வித பக்கவிளைவுகளும் இன்றி  நோயை குணமாக்குகிறது என்கிறார்கள் இந்த சிகிச்சையை மேற்கொண்டு வரும் மக்கள்.

மண்ணை உடல் முழுவதும் பூசிக் கொண்டு சூரிய வெளிச்சத்தில் சில நிமிடங்கள் நின்றால் உடலில் பல்வேறு மாற்றங்கள் தெரிகிறதாம். உடலில் உள்ள நச்சுகளை எல்லாம் இந்த மண் உறிஞ்சிக் கொண்டு புத்துணர்வை அளிக்கிறது என்கிறார்கள் சிகிச்சை பெறுவோர். இதற்காக பூமியில் குறிப்பிட்ட பகுதியில் இருந்து மட்டுமே மண் எடுக்கப்படுகிறது. பூமியில் இருந்து எடுக்கப்படும் மண் பல கட்ட சோதனைகளுக்கு பிறகே பயன்படுத்தப்படுகிறதாம்.

உடல் பருமன், வெரிகோஸ் வெய்ன், கால் வலி, சிறுநீரக பிரச்சினை, நரம்பு கோளாறுகள், முடக்குவாதம் என எல்லா நோய்களுக்கும் மண் சிகிச்சை சிறந்தது என்கிறது இயற்கை மருத்துவம். நோயை இயற்கை முறையிலேயே எதிர்கொள்ளும் இந்த மருத்துவமுறை நிச்சயம் மக்கள் மத்தியில் சென்றடையும் என்பதில் சந்தேகமில்லை.

Next Story

மேலும் செய்திகள்