சென்னைக்கு ரயிலில் இறைச்சி அனுப்பிய விவகாரம் : 2 பேர் மீது ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு

ரயிலில் இறைச்சி அனுப்பியது தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு ரயிலில் இறைச்சி அனுப்பிய விவகாரம் : 2 பேர் மீது ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு
x
* சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், சில தினங்களுக்கு முன் 12 பெட்டிகளில் ஆயிரம் கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. நாய்க் கறியாக இருக்கும் என்ற சந்தேகத்தின்பேரில், பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரித்தபோது, குஜராத்தில் உள்ள காந்திதாமில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் எடுத்து செல்லப்பட்டு, அங்கிருந்து மன்னார்குடி விரைவு ரயிலில் சென்னைக்கு அனுப்பி வைத்தது தெரிய வந்தது.

* 'மீன் இறைச்சி' என பதிவு செய்து, ரயிலில் அனுப்பிய இந்த பார்சல் தொடர்பாக, சென்னையை சேர்ந்த ஜெய்சங்கர், கணேசன் ஆகிய 2 பேர் மீது ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இறைச்சியை அனுப்பிய நிறுவனம் குறித்து விசாரிக்க ஜோத்பூர் செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.
 
* இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறுகையில், தவறான தகவலை கூறி பார்சல் அனுப்பிய குற்றத்துக்காக வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் நாய்க்கறியா என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை தான் விளக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்