பாரம்பரிய கருப்பட்டி வெல்லம் கொண்டு தயாராகும் கிறிஸ்துமஸ் பிளம்கேக்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டிற்காக பாரம்பரிய கருப்பட்டி வெல்லம் கலந்து பல வகையான உலர்ந்த பழங்கள் கொண்டு பிளம் கேக் தயாரிக்கும் விழா சேலத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
பாரம்பரிய கருப்பட்டி வெல்லம் கொண்டு தயாராகும் கிறிஸ்துமஸ் பிளம்கேக்
x
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டிற்காக பாரம்பரிய கருப்பட்டி வெல்லம் கலந்து பல வகையான உலர்ந்த பழங்கள் கொண்டு பிளம் கேக் தயாரிக்கும் விழா சேலத்தில் கோலாகலமாக நடைபெற்றது. திராட்சை, முந்திரி, பிஸ்தா, பாதாம், பேரிட்சை உள்ளிட்ட 15 வகையான உலர் பழங்களுடன் தேன் மற்றும் ஒயின் உட்பட பல்வேறு வகை திரவியங்கள் கலக்கப்பட்டது.100 கிலோ அளவுள்ள இந்த கலவை 45 நாட்கள் ஊற வைக்கப்பட்டு, மைதா, சர்க்கரை சேர்த்து 200 கிலோ கேக்காக தயாரிக்கப்பட்டது. தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த விழாவில் ஊழியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்