கடலில் கச்சா எண்ணெய் கலப்பு: "மீன்வளம் பாதிக்கப்படுமோ என் மீனவர்கள் அச்சம்"

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் மீண்டும் கடலில் கொட்டிய கச்சா எண்ணெயால், மீன்வளம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மீனவர்கள் உள்ளனர்.
கடலில் கச்சா எண்ணெய் கலப்பு: மீன்வளம் பாதிக்கப்படுமோ என் மீனவர்கள் அச்சம்
x
எண்ணூர் காமராஜர் துறைமுக வளாகத்தில் உள்ள சி.பி.சி.எல் நிறுவனத்திற்கு மார்ஷல் தீவைச் சேர்ந்த கோரல் ஸ்டார் கப்பல்,  25 ஆயிரத்து 400 டன் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு  நவம்பர் 14-ல் வந்தது.  இந்த கப்பலில் இருந்து நேற்று  குழாய் மூலம் கச்சா எண்ணெய் இறக்கும் பணி நடந்த போது, திடீரென இணைப்புக் குழாய் உடைந்துள்ளது. இதில் சுமார் 2 டன்  கச்சா எண்ணெய் வெளியேறி  கடலில் கலந்தது. இதனை அகற்றும் பணி நடைபெற்று வரும் நிலையில்,  கடலில் கொட்டிய கச்சா எண்ணெய்   பாதிப்பு குறித்து கண்டறிய விசாகப்பட்டினத்தில் இருந்து  கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான கப்பல் உள்பட 2 கப்பல்கள் வந்து கொண்டு இருக்கிறது.  கச்சா எண்ணெய் கொட்டியதால் மீன்வளம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்