40 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட காரைக்கால் வாரச்சந்தை...

புதுச்சேரி மாநிலத்தில் காய்கறிகள் முதல் செடிகள், மளிகை சாமான்கள் என எல்லாம் கிடைக்கும் சந்தை.
40 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட காரைக்கால் வாரச்சந்தை...
x
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் செயல்படுகிறது இந்த வாரச்சந்தை... இந்த சந்தை 40 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டதாக இருக்கிறது. இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை எனும் அளவுக்கு பொருட்கள் மலை மலையாக குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. நகரின் மையப்பகுதியில் இந்த சந்தை செயல்படுவதால் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு வாழ்வளிக்கும் ஒரு இடமாக இந்த சந்தை செயல்படுகிறது...விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளைவிக்கப்பட்ட பொருட்களை மொத்தமாக கொண்டு வந்து இந்த சந்தையில் விற்பனை செய்கிறார்கள். இந்த சந்தையில் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் எல்லாம் ருசியிலும் தரத்திலும் அபாரமாக இருப்பதால் இந்த சந்தைக்கு வாரந்தோறும் தவறாமல் வரும் வாடிக்கையாளர்களும் உண்டு... 

வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமை செயல்படும் சந்தை என்பதால் மக்கள் கூட்டம் இங்கு அலைமோதுகிறது. அதிகாலை தொடங்கும் இந்த சந்தை இரவை தாண்டியும் ஜோராக நடக்கிறது. காய்கறிகள், பழங்கள் மட்டுமின்றி மூலிகை செடிகள், மரக்கன்றுகள் என எல்லாம் விற்பனை செய்யும் இடமாக இந்த சந்தை செயல்படுகிறது. இறைச்சி தேவைக்காகவும், வளர்ப்பதற்காகவும் கோழிகளை வாங்கிச் செல்ல ஏராளமானோர் இங்கு வருகிறார்கள். அதேபோல் வாத்து போன்ற பறவைகளும் இந்த சந்தையில் விற்கப்படுகிறது... கூறுகளாகவும், மொத்தமாகவும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதால் அவரவர் தேவைக்கு ஏற்றார் போல இங்கு வந்து வாங்கிச் செல்வோரும் உண்டு.

மிளகு, சீரகம், பருப்பு வகைகள் என எல்லாம் இந்த சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. வாரத்தில் ஒரு நாள் சந்தைக்கு வந்தால் எல்லாம் மொத்தமாக வாங்கிச் செல்ல முடியும் என்பதால் பல பகுதிகளில் இருந்தும் இந்த சந்தைக்கு மக்கள் வருகிறார்கள். பல லட்ச ரூபாய் வணிகம் ஈட்டும் ஒரு சந்தையாக காரைக்கால் சந்தை செயல்படுகிறது என்பது வியாபாரிகள், பொதுமக்கள்  மத்தியில் மகிழ்ச்சியான விஷயமும் கூட... 



Next Story

மேலும் செய்திகள்